ETV Bharat / sitara

சமூக அக்கறை கொண்ட படமாக உருவாகும் "அம்மா உணவகம்"

சென்னை: கரோனா பேரிடர் காலத்தில் மக்கள் உணவுக்கு பட்டப் பாட்டை மையமாக வைத்து இயக்குநர் விவேகபாரதி சமூக அக்கறை கொண்ட படமாக அம்மா உணவகத்தை இயக்கியுள்ளார்.

amma unavagam
amma unavagam
author img

By

Published : Oct 4, 2021, 3:17 PM IST

இயக்குநர் வெங்கட் பிரபு கதாநாயகனாக நடித்த வசந்தம் வந்தாச்சு, மாஸ்டர் மகேந்திரன் நடித்த என்றுமே ஆனந்தம் போன்ற படங்களை இயக்கியவர் விவேக பாரதி. இவர் தற்போது அம்மா உணவகம் என்ற பெயரில் படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

amma unavagam
அம்மா உணவகம் படத்தில் ஒரு காட்சி

இந்திரன், சசி சரத், அஸ்வின் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் ஸ்ரீநிதி, இயக்குநர்கள் ஆர். வி.உதயகுமார், சுப்ரமணியம் சிவா, ஷரவண சக்தி, பாத்திமா, நாட்டுப்புற கலைஞர் மன்னை ஸ்ரீமூர்த்தி, சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்ன், ஜேசுதாஸ், ஈரமான ரோஜாவே சிவா, நாஞ்சில் சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

amma unavagam
அம்மா உணவகம்

இப்படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், சமூக அக்கறையும் சகமனிதன் மீது பேரன்பும் கொண்ட ராஜகிருஷ்ணா தன் இளைய மகள் ஸ்ரீநிதியுடன் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மற்றொரு வாடகை வீட்டில் பல்வேறு கனவுகளோடு பல தரப்பட்ட மனிதர்களும் வாடகைக்கு குடி இருக்கிறார்கள்.

amma unavagam
அம்மா உணவகம்

இவர்களது இயல்பு நிலைவாழ்க்கை கரோனா பேரிடர் காலத்தில் மோசமாக பாதித்து உணவுக்கே வழியின்றி தவிக்கின்றனர். இவர்களின் லட்சியங்களும் கனவுகளும் பிரதிபலிக்கும் விதமாக யதார்த்தமான முறையில் இப்படம் உருவாகியுள்ளது என்றனர்.

இதையும் படிங்க: சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.