ETV Bharat / sitara

வெற்றிமாறன் வெளியிடும் 'காவல்துறை உங்கள் நண்பன்' - Kavalthurai Ungal Nanban release Date

சென்னை: 'காவல்துறை உங்கள் நண்பன்' படத்தின் வெளீட்டில் தனஞ்ஜெயனுடன் வெற்றிமாறனும் கைக்கோத்துள்ளார்.

Kavalthurai Ungal Nanban
Kavalthurai Ungal Nanban
author img

By

Published : Nov 13, 2020, 4:44 PM IST

பொதுமக்களிடம் காவல் துறை காட்டும் அதிகாரத்தை வைத்து உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஆர்டிஎம் இயக்கியுள்ள படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'.

இந்தப் படத்தில் சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். போலீஸுக்கும், பொதுமக்களில் ஒருவராக இருக்கும் ஹீரோவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் படம் உருவாகியுள்ளது. விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ஆதித்யா - சூர்யா இசையமைத்துள்ளனர்.

பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், ஒயிட் மூன் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை தனஞ்ஜெயன் கைப்பற்றினார். இப்படத்தன் போஸ்டர்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்துமே வெளியாகி ரசிகர்களிடையே படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டில் தனஞ்ஜெயனுடன் வெற்றிமாறனும் கைக்கோத்துள்ளார். இது குறித்து தனஞ்ஜெயன் கூறியிருப்பதாவது, "வெற்றிமாறன் போன்ற படைப்பாளி இந்தப் படத்தின் மீது கவனம் கொண்டது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் பெரும் ஆசீர்வாதம். நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்கள் மீது வெற்றிமாறன் எப்போதும் பெரும் காதல் கொண்டுள்ளார்.

அவ்வகையிலான படங்களுடன் தன்னை எந்த வகையிலாவது இணைத்துக் கொள்வதில் ஆர்வமுடன் இருப்பார். 'காவல்துறை உங்கள் நண்பன்' படம் சொல்லப்பட்டிருந்த விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தைப் பார்த்து முடித்தவுடன் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டினார்.

தனது க்ராஸ் ரூட் நிறுவனம் மூலம் இப்படத்தை வெற்றிமாறன் வெளியிடுவதால் இந்தப் படத்தின் மீதான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.