திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி, ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் ஒன்றுகூடி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்பொழுது இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பது, "நாளை மாலை 6 மணி முதல் 6.05 வரை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண உடல் நலம் பெற வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற உள்ளது. அந்தப் பிரார்த்தனையில் நாடு, இனம், மதம், மொழி போன்ற பாகுபாடு இல்லாமல், அனைவரும் அவரவர்கள் இருப்பிடத்திலிருந்து, இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற கூட்டுப் பிரார்த்தனை - வெங்கட் பிரபு - இயக்குனர் வெங்கட் பிரபு
சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற பாகுபாடின்றி அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இயக்குநர் வெங்கட் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார்.