சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூரரைப் போற்று'. இதில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளிவெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏர் டெக்கான் என்ற பெயரில் குறைந்த கட்டணத்திலான விமான சேவையை தொடங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அவரது வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.
அமேசன் ப்ரைமில் தீபாவளி வெளியீடாக நவம்பர் 12ஆம் தேதி வெளியானது. ஓடிடி தளத்தில் படத்தை பார்த்த ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
-
#SooraraiPottruOnPrime, now on @PrimeVideoIN@Suriya_offl#SudhaKongara@rajsekarpandian @gvprakash pic.twitter.com/3QTyTWv7GH
— Vasanth S Sai (@itsme_vasanth) November 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#SooraraiPottruOnPrime, now on @PrimeVideoIN@Suriya_offl#SudhaKongara@rajsekarpandian @gvprakash pic.twitter.com/3QTyTWv7GH
— Vasanth S Sai (@itsme_vasanth) November 18, 2020#SooraraiPottruOnPrime, now on @PrimeVideoIN@Suriya_offl#SudhaKongara@rajsekarpandian @gvprakash pic.twitter.com/3QTyTWv7GH
— Vasanth S Sai (@itsme_vasanth) November 18, 2020
அந்த வகையில், இயக்குநர் வஸந்த் சூர்யாவைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர் கூறியுள்ளதாவது, "அன்புள்ள சூர்யாவுக்கு... இந்தப் பாராட்டுக் கடிதம் உனக்கு இல்லை. நெடுமாறன் ராஜாங்கத்திற்கு. முதல் பிரேமிலிருந்து கடைசி பிரேம்வைரை உன் ஆட்சி தான். காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய்.
தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக் கொண்டு மிகச் சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் இதுதான் உன் உச்சம். இப்போதைக்கு நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.
முதல் காட்சியின் ஆரம்பம் கூட பிரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன்முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத் தன்மை, அதைச் சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதி வரை தெரிகிறது. கனல் மணக்கும் பூக்களாக ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்துக்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.
உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் தொப்பியை மாட்டிக் கொண்டு சொல்கிறேன் "HATS OFF TO YOU MY DEAR SURIYA" என்னை விட யாருக்கும் மகிழ்ச்சி இருந்து விட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ. எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என் உச்சி முகர்ந்து உச்சி முகர்ந்து மகிழ்கிறேன்" என வஸந்த் குறிப்பிட்டுள்ளார்.
வஸந்த் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் சூர்யாவை கதாநாயகனாக அறிமுப்படுத்தினர்.