ETV Bharat / sitara

இயக்குநர் தியாகராஜன் காலமானார்! - rip director thiyagarajan

விஜயகாந்தின் 'மாநகர காவல்' திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் இன்று (டிசம்பர் 8) காலை காலமானார்.

http://10.10.50.85//tamil-nadu/08-December-2021/c24f1677-e57b-4529-b88a-32c6ab9e0414_0812newsroom_1638952277_608.jpg
இயக்குநர் தியாகராஜன்
author img

By

Published : Dec 8, 2021, 2:18 PM IST

சென்னை : விஜயகாந்த் நடிப்பில் உருவான 'மாநகர காவல் ', பிரபுவின் 'வெற்றி மேல் வெற்றி' திரைப்படங்களின் இயக்குநரான எம். தியாகராஜன் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைப் பூர்விகமாகக் கொண்ட தியாகராஜன் கடந்த சில ஆண்டுகளாகக் கவனிப்பாரின்றி சாலிகிராமத்தில் வசித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோ முன்புறம் கிடந்த நிலையில் விருகம்பாக்கம் காவல் துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

1997ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் தியாகராஜனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு சற்று மனநல பாதிப்புடன் அவர் இருந்துவந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உடற்கூராய்வு முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊரான அருப்புக்கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

1991ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தின் 150ஆவது படமாக தியாகராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'மாநகர காவல்' திரைப்படம் வசூல் ரீதியாகப் பெறும் வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஆந்திர வெள்ளம்: ஒரு கோடி ரூபாய் வழங்கிய பிரபாஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.