ETV Bharat / sitara

இயக்குநர் தாமிரா காலமானார் - director thamira movies

சென்னை: இயக்குநர் தாமிரா கரோனா தொற்று காரணமாக இன்று (ஏப்ரல் 27) காலமானார்.

தாமிரா
தாமிரா
author img

By

Published : Apr 27, 2021, 9:56 AM IST

மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தாமிரா 2010ஆம் ஆண்டு, ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கினார்.

தனது முதல் படத்திலேயே கே. பாலச்சந்தர்- பாரதிராஜா ஆகியோரை வைத்து படம் இயக்கி கவனம் பெற்றார். இதனையடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து சமுத்திரக்கனியை வைத்து ’ஆண் தேவதை’ படத்தை இயக்கினார்.

இதற்கிடையில் தாமிராவுக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் தாமிரா சிகிச்சைப் பலனின்றி இன்று (ஏப்ரல் 27) உயிரிழந்தார். இவரின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

மேலும் தாமிராவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தயாரிப்பாளர் ராமுவின் உயிரைப் பறித்த கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.