மக்களவைத்தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள பழம்பெரும் கட்சிகள் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில், பிரசாரக்கூட்டங்களின் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற கடுமையாக உழைத்து வருகின்றனர். இதனோடு நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியைத்தொடங்கி தேர்தலில் தனித்துப் போட்டியிட இருப்பதால் கமல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் அஜித்தை அரசியலுக்கு வரவேண்டும் என கடிதம் எழுதி ட்விட்டரில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதிய கடிதத்தில், "நாற்பது ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவிகிதம் சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு... உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்"என எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், தனக்கு அரசியலே வேண்டாம் எனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறி வரும் அஜித்தை கடிதத்தின் மூலம் சுசீந்திரன் அரசியலுக்கு அழைத்திருப்பதை அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், அவருடைய ட்வீட்டுக்கு பதில் அளித்த அஜித் ரசிகர்கள், எங்களுக்கு அஜித் போதும், அரசியல் வேண்டாம் எனத்தெரிவித்துள்ளனர்.
#ThalaAjithkumarfans ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️welcome naaaaaa❤️❤️❤️@SureshChandraa @PTTVOnlineNews 😍😍😍😍 pic.twitter.com/hAmQgzgYF9
— Suseenthiran (@dir_susee) March 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ThalaAjithkumarfans ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️welcome naaaaaa❤️❤️❤️@SureshChandraa @PTTVOnlineNews 😍😍😍😍 pic.twitter.com/hAmQgzgYF9
— Suseenthiran (@dir_susee) March 16, 2019#ThalaAjithkumarfans ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️welcome naaaaaa❤️❤️❤️@SureshChandraa @PTTVOnlineNews 😍😍😍😍 pic.twitter.com/hAmQgzgYF9
— Suseenthiran (@dir_susee) March 16, 2019
அதனைத்தொடர்ந்து, '#அரசியல்வேண்டாம்அஜித்போதும்' என்ற ஹேஷ்டாக்கை அஜித் ரசிகர்கள்உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.