சென்னை: இயக்குநர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி நெஞ்சுவலி காரணமாக இன்று மரணமடைந்தார்.
இயக்குநர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி(62). இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறவுள்ளது. சுசீந்திரனின் தாயார் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.
![suseenthiran national award, director Suseenthiran mother passed away, இயக்குநர் சுசீந்திரன் தாயார் காலமானார், இயக்குநர் சுசீந்திரன், tamilnadu deaths today, death news today](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-suseenthiran-mother-script-7205221_15012021120512_1501f_1610692512_931.jpg)
இயக்குநர் சுசீந்திரன் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கிப் புகழ் பெற்றவர்.
இவர் 'அழகர்சாமியின் குதிரை' என்ற தேசிய விருது வென்ற திரைப்படத்தின் இயக்குநர் ஆவார். இவரது இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, திரையரங்குகளில் நேற்று (ஜனவரி 14) வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.