சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பின் வைகைப்புயல் வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்னும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, வடிவேலு படக்குழுவினருடன் லண்டன் சென்று 10 நாள்களுக்கும் மேல் தங்கியிருந்தார். இதையடுத்து சென்னை திரும்பிய அவருக்கு நேற்று கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யவும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், இயக்குநர் சுராஜ்க்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் குமரனுக்கு ஒமைக்ரான் ஆரம்ப அறிகுறி உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vadivelu affected Covid 19: வடிவேலுவிற்குக் கரோனா - என்ன நிகழ்ந்தது?