இயக்குநர் ஷங்கர் தகமலை வைத்து 'இந்தியன் 2' படத்தை இயக்கிவந்தார். ஆனால் கரோனா பாதிப்பு, படப்பிடிப்பில் விபத்து உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்புப் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதனை அடுத்து தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கும் வேலைகளில், ஷங்கர் பிஸியாக உள்ளார். தில் ராஜு தயாரிக்கும் 50ஆவது படமாக இது உருவாகிறது.
-
In this moment, no one will be happier than me, bringing back the larger than life cinematic experience with @RanveerOfficial in the official adaptation of cult blockbuster Anniyan.@jayantilalgada @PenMovies pic.twitter.com/KyFFTkWGSL
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In this moment, no one will be happier than me, bringing back the larger than life cinematic experience with @RanveerOfficial in the official adaptation of cult blockbuster Anniyan.@jayantilalgada @PenMovies pic.twitter.com/KyFFTkWGSL
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 14, 2021In this moment, no one will be happier than me, bringing back the larger than life cinematic experience with @RanveerOfficial in the official adaptation of cult blockbuster Anniyan.@jayantilalgada @PenMovies pic.twitter.com/KyFFTkWGSL
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 14, 2021
இந்தப் படங்களைத் தொடர்ந்து ஷங்கர், ரன்வீர் சிங் நடிக்கும் இந்தி படமொன்றை இயக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக் உருவாகவுள்ளது.
இதற்கான அறிவிப்பை ஷங்கர் தனது ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தை ஜெயந்திலால் தயாரிக்கிறார். விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.