பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன் நாயகனாக நடித்திருந்தார். மதுபாலா, சுபஸ்ரீ என இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர். கல்வித்துறையில் நடந்த ஊழல் குறித்து இப்படம் பேசியது.
கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான 'என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுபார்...', 'சிக்கு புக்கு...சிக்கு புக்கு ரயிலே...' பாடல்கள் அப்போது பெரும் ஹிட் அடித்தன.
இப்படி பாடல்கள் ஒரு பக்கம் படத்துக்கு பலம் சேர்த்து கொண்டிருக்கையில், கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை மற்றொரு பக்கம் பலம் சேர்த்தது. எஸ்.ஏ. சந்திரசேகரிடம் உதவியாளராக இருந்த ஷங்கர், தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக மாற்றியது ஜென்டில் மேன்.
ஜென்டில்மேன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 28ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில், '#28YearsofGentleman', '#28YearsofShankar' என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இவர் திரைப்படத்துக்காக நான் காத்திருக்கிறேன் - இயக்குநர் ஷங்கர்