தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர், ஷங்கர். இவர் எடுக்கும் படங்கள் தொழில் நுட்ப அளவிலும் பொருளாதார அளவிலும் பிரமாண்டத்தின் உச்சமாக இருப்பதால், இவர் இந்திய சினிமாவில் பிரமாண்ட பட இயக்குநர் என அழைக்கப்படுகிறார்.
இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்தமகளான ஐஸ்வர்யா மருத்துவராக உள்ளார். இவருக்கும் கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ரோகித் புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். ரோகித்தின் தந்தை தாமோதரன் தொழிலதிபர் மட்டுமல்லது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் 'மதுரை பேந்தர்ஸ்' அணியின் உரிமையாளர் ஆவார்.
ஐஸ்வர்யா - ரோகித் திருமணம் ஜூன் 27ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறுகிறது. கரோனா ஊரடங்கால் ஷங்கர் - தாமோதரனின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: இந்தியன் 2 படம் தாமதம்: லைகா நிறுவனமே காரணம் இயக்குநர் ஷங்கர் குற்றச்சாட்டு!