ETV Bharat / sitara

தந்தை...மகன்கள்...வைரலாகும் செல்வராகவன் வெளியிட்ட புகைப்படம்

தந்தை கஸ்தூரி ராஜாவுடன் மகன்கள் செல்வராகவன், தனுஷ் இணைந்து எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

c
c
author img

By

Published : Oct 27, 2021, 5:28 PM IST

'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன' போன்ற வெற்றிப் படங்களைத் தந்தவர்கள் செல்வராகவன் - தனுஷ். இந்தக் கூட்டணியில் மீண்டும் படம் வராதா என தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், ‘நானே வருவேன்’ படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது முன் தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்து நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியது.

'நானே வருவேன்' திரைப்படத்தில் தனஷ் கெளவ் பாய் போன்று டான் லுக்கில் தோன்றுவதாக தெரிகிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழுத் திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் - செல்வராகவன் கூட்டணி மீண்டும் 'ஆயிரத்தில் ஒருவன் - 2' படத்தில் இணையவுள்ளனர். இதன் படப்பிடிப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது.

செல்வராகவன், தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை செல்வராகவன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விருது இரண்டு, இயக்குநர் ஒன்று- வெற்றிமாறன் குறித்து தனுஷ் நெகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.