ETV Bharat / sitara

ஊரடங்கில் பணியாற்றுபவர்களுக்கு சீனு ராமசாமி எழுதிய 'வாழ்த்துப்பா' - கரோனா பணியாற்றுபவருக்கு சீனு ராமசாமி எழுதிய பாடல்

கரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கும் ஊரடங்கு நேரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்துப் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

director seenu ramasamy poem for corona fighters

author img

By

Published : Apr 23, 2020, 7:15 PM IST

'நீர்ப்பறவை', 'தர்மதுரை' போன்ற திரைப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. தேசிய விருது பெற்ற இயக்குநரான இவர், கரோனா தொற்றால் மரித்த மருத்துவர்களுக்காக இரங்கற்பா ஒன்றை சில நாள்களுக்கு முன்னர் எழுதினார்.

இந்நிலையில் கரோனா தொற்றை எதிர்த்து பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்காய் சீனு ராமசாமி வாழ்த்து பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அப்பாடல் பின்வருமாறு...

'மக்களைக் காக்கும் மக்களே வாழ்க என்றும் வாழ்கவே

மக்களைக் காக்கும் மக்களே வாழ்க என்றும் வாழ்கவே

சுமந்து பெற்றவள் எங்கள் தாய் இன்று உயிரை காப்பவள் செவிலித்தாய்

விண்வெளி உடையணிந்தாய் விரைந்து பணி செய்தாய்

மக்களை காக்கும் இவள் புனிதத் தாய்

வாழ்க என்றும் வாழ்கவே

தன்னையே அர்ப்பணம் செய்து மருத்துவம் செய்யும் மருத்துவரே

நீயும் ஓர் தாய்க்கு மகனல்லவா எம் பிள்ளைகள் வணங்கும் உனையல்லவா..

வாழ்க என்றும் வாழ்கவே

மக்களைக் காக்கும் மகேசனே நெருப்பு வெயிலிலே பொறுப்பாய் நிற்பவரே

முதலில் அன்பாய் சொன்னவரே அறிந்து வருபவரை அதிர விரட்டிக் காத்தவரே

வாழ்க என்றும் வாழ்கவே

மக்களைக் காக்கும் காவலரே ஊரடங்கில் ஊரை சுத்தம் செய்தவரே நீல உடையில்

சாக்கடையை சரி செய்தவரே நீங்கள் தொழிலாளியல்ல தூய்மைத் தொண்டர்கள்

வாழ்க என்றும் வாழ்கவே

மக்களை காக்கும் பெருந்தெய்வமே அன்பும் அறமும் தாழ்ந்து விடாது

இனி கரோனா கிருமி வாழ்ந்து விடாது'

இதையும் படிங்க... கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு சீனு ராமசாமி இரங்கற்பா

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.