'கூடல்நகர்' மூலம் இயக்குநராக அறிமுகமான சீனு ராமசாமி 'தென்மேற்குப் பருவக்காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 'இடம்பொருள் ஏவல்', 'மாமனிதன்' ஆகியவை வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் இவர் தற்போது ஜி.வி. பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷூக்கு ஜோடியாக காயத்திரி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை (ஆகஸ்ட்.11) வெளியாகும் எனபடக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாணவியின் படிப்புச் செலவுக்காகப் பாடல் பாடிய ஜி.வி. பிரகாஷ்