ETV Bharat / sitara

போலீஸுக்கு சித்தார்த்தான் சரி: சசி சொன்ன காரணம்! - சிறப்பு நேர்காணல்

'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் இயக்குநர் சசி தனது திரைப்பட அனுபவம் பற்றி ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

sasi
author img

By

Published : Sep 8, 2019, 7:35 PM IST

’பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சசி இயக்கியுள்ள திரைப்படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நாயகர்களாக நடித்துள்ள இத்திரைப்படத்தில் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ், தீபா இராமானுஜம் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

போக்குவரத்து காவலராக சித்தார்த்தும், பைக் ரேஸராக ஜி.வி. பிரகாஷும் நடித்துள்ளனர். அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான பைக் சேசிங் காட்சிகளுடன் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநர் சசி ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

இயக்குநர் சசியுடன் சிறப்பு நேர்காணல்

சிவப்பு மஞ்சள் பச்சை படம் அவசரத்தில் வெளியிட்ட படமா?

ஒரு நாளுக்கு முன்புதான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய போகிறோம் என்று முடிவு செய்தோம். மிகவும் குறைந்த கால அவகாசத்தில் இந்த படம் திரையரங்கிற்கு வந்துள்ளது. நாங்கள் நம்பியது ஒரே விஷயம்தான். இந்தப்படத்தில் மக்களுக்கு பிடித்த கன்டென்ட் உள்ளது.

இந்த நம்பிக்கையில்தான் தைரியமாக இந்த படத்தை ரிலீஸ் செய்தோம். முதல் நாள் படம் பார்த்த 90 சதவிகிதம் மக்கள் படம் சூப்பர் என்றார்கள். பெரும்பாலான மக்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்கள். இதைதான் நாங்கள் எதிர்பார்த்தோம்.

மாமன் மச்சான் உறவு குறித்து கதை உருவாக காரணமாக அமைந்தது எது?

இதுவரை சினிமாவில் சொல்லப்படாத உறவுமுறை எது என்று யோசித்தபோது இந்தக் கதை தோன்றியது. என்னுடைய நண்பர் ஒருவரின் மனைவிக்கு ஒரு சகோதரன் இருக்கிறான். அவன் அவனை மிகவும் மதிப்பான் . அவனோடு அமர்ந்து பீர் குடிப்பான். இரண்டு பீர் குடிப்பதற்கு மட்டுமே அனுமதிப்பான். மூன்றாவது பீரை கையில் எடுத்தால் அதை தடுத்துவிடுவான். ஏன் என்று கேட்டால் என் அக்காவின் வாழ்க்கை என்று கூறுவானாம்.

இதேபோன்று, எனது மனைவியும் தம்பி வேலைக்கு போகவில்லை. அவனை கண்டித்து வையுங்கள் என்று கூறுவார் .நான் கண்டித்தால் அவன் பயந்து விடுவான். இந்த உறவுமுறை என்னவென்று சொல்வது. தம்பியா மகனா உறவினரா இந்த உறவுமுறை என் மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது. இது என் மனதிலேயே இருந்தது. இதை வைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன்.

இந்தப் படத்தில் ட்ராபிக் தொடர்பான சமூக கருத்தை கொண்டு வருவதற்கு காரணம்?

ஒரு கதாபாத்திரம் உருவாகும் பொழுது . கதாபாத்திரத்தின் தன்மை என்ன. அவன் என்னவெல்லாம் பேசுவான் என்பது ஸ்கெட்ச் பண்ணும் போதே தெரிந்துவிடும். அதன் வெளிப்பாடுதான் இந்த படத்தில் வரும் டிராபிக் விஷயங்கள்.

பெண்கள் அணியும் உடை குறித்து இந்தப்படத்தில் கூறியுள்ளீர்கள் அதைப்பற்றி?

ஆண்மை பற்றிய எந்த ஒரு விஷயமும் முதன்மையாகவும் பெண்ணைப் பற்றிய விஷயங்கள் இரண்டாவதாகவும்தான் இந்த சமூகத்தில் பார்க்கப்படுகிறது. என் மனைவி என்னை என்னங்க என்றுதான் கூறுவார். நான் என் மனைவியை அவள் என்றுதான் கூறுவேன். நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் என்று கூற ஆரம்பித்தேன். பெண்களை எப்பொழுதும் உடைகள் ஆகட்டும், பேச்சுகள் ஆகட்டும் ஆண்களுக்கு அடுத்தபடியாகதான் நாம் வைக்கிறோம். அதையெல்லாம் உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை நான் வைத்தேன்.

பெண்கள் ஆண்களுடைய உடையை அணியும் பொழுது பெருமையாக நினைக்கிறார்கள், அதே பெண்கள் அணியும் உடையை ஆண்கள் அணிந்தால் ஏன் அதை அவமானமாக நினைக்கிறார்கள் என்ற கேள்விக்குதான் அந்த காட்சி வைக்கப்பட்டது.

சித்தார்த், ஜிவி பிரகாஷ் தேர்வு பற்றி?

எனக்கு ஒரு 19 வயது பையன் கதாபாத்திரத்திற்கு ஜிவி பிரகாஷ் தவிர வேறு யாரையும் நினைக்க தோன்றவில்லை. நடிகர் சித்தார்த் இதுவரை போலீஸ் வேடத்தில் நடித்ததில்லை. அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சித்தார்த்தின் கதாபாத்திரம் கஷ்டமானது .வேறு யாராவது நடித்தால் அதை சிக்கலாக்கி விடுவார்கள். தேர்ந்த ஒரு நடிகரால் மட்டுமே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும், அதனால் அவரை தேர்ந்தெடுத்தோம்.

அடுத்த ப்ராஜெக்ட் பற்றி?

தற்போது ஒன்றும் இல்லை, இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் எனது பணி.

Intro:சிகப்பு மஞ்சள் பச்சை படம் அவசரத்தில் வெளியிட்ட படமா?Body:ஒரு நாளுக்கு முன்புதான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய போகிறோம் என்று முடிவு செய்தோம். மிகவும் குறைந்த கால அவகாசத்தில் இந்த படம் திரையரங்கிற்கு வந்துள்ளது. நாங்கள் நம்பியது ஒரே விஷயம்தான். இந்தப்படத்தில் மக்களுக்கு பிடித்த கன்டென்ட் உள்ளது என்ற நம்பிக்கையில் தான் தைரியமாக இந்த படத்தை ரிலீஸ் செய்தோம். முதல் நாள் படம் பார்த்த 90 சதவிகிதம் மக்கள் படம் சூப்பர் என்றார்கள். பெரும்பாலான மக்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்கள். இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம்.

மாமன் மச்சான் உறவு குறித்து கதை உருவாக காரணமாக அமைந்தது எது?

இதுவரை சினிமாவில் சொல்லப்படாத உறவுமுறை எது என்று யோசித்தபோது இந்தக் கதை தோன்றியது. என்னுடைய நண்பர் ஒருவர் அவரின் மனைவிக்கு ஒரு சகோதரன் இருக்கிறான். அவன் என்னை மிகவும் மதிப்பான் . அவனோடு அமர்ந்து மது அருந்துவேன். இரண்டு பீர் குடிப்பதற்கு என்னை அனுமதிப்பான். மூன்றாவது பீரை நான் கையில் எடுத்தால் அதை தடுத்துவிடுவான். ஏன் என்று கேட்டால் என் அக்காவின் வாழ்க்கை என்று கூறுவான். இதேபோன்று, எனது மனைவியும் தம்பி வேலைக்கு போகவில்லை அவனை கண்டித்து வையுங்கள் என்று கூறுவார் .நான் கண்டித்தால் அவன் பயந்து விடுவான். இந்தப் உறவுமுறை என்னவென்று சொல்வது. தம்பியா மகனா உறவினரா இந்த உறவுமுறை என்ன மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது என்று என்னிடம் கூறினார். இது என் மனதிலேயே இருந்தது. இதை வைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன்.

இந்தப் படத்தில் ட்ராபிக் தொடர்பான சமூக கருத்தை கொண்டு வருவதற்கு காரணம்?

ஒரு கதாபாத்திரம் உருவாகும் பொழுது . கதாப்பாத்திரத்தின் தன்மை என்ன. அவன் என்னவெல்லாம் பேசுவான் என்பது ஸ்கெட்ச் பண்ணும் போதே தெரிந்துவிடும். அதன் வெளிப்பாடுதான் இந்த படத்தில் வரும் டிராபிக் விஷயங்கள்.

பெண்கள் அணியும் உடை குறித்து இந்தப்படத்தில் கூறியுள்ளீர்கள் அதைப்பற்றி?

ஆண்மை பற்றிய எந்த ஒரு விஷயமும் முதன்மையாகவும் பெண்ணைப் பற்றிய விஷயங்கள் இரண்டாவதாகவும் தான் இந்த சமூகத்தில் பார்க்கப்படுகிறது. என் மனைவி என்னை என்னங்க என்றுதான் கூறுவார். நான் என் மனைவியை அவள் என்றுதான் கூறுவேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் அவர்கள் என்று கூற ஆரம்பித்தேன். பெண்களை எப்பொழுதும் உடைகள் ஆகட்டும் பேச்சுகள் ஆகட்டும் ஆண்களுக்கு அடுத்தபடியாக தான் நாம் வைக்கிறோம். அதையெல்லாம் உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை நான் வைத்தேன். பெண்கள் ஆண்களுடைய உடையை அணியும் பொழுது பெருமையாக நினைக்கிறார்கள் அதே பெண்கள் அணியும் உடையை ஆண்கள் அணிந்தால் ஏன் அதை அவமானமாக நினைக்கிறார்கள் என்ற கேள்விக்கு தான் அந்த காட்சி வைக்கப்பட்டது.

சித்தார்த் ஜிவி பிரகாஷ் தேர்ந்தெடுத்ததை பற்றி?

எனக்கு ஒரு 19 வயது பையன் கதாபாத்திரத்திற்கு ஜிவி பிரகாஷ் தவிர வேறு யாரையும் எனக்கு தோன்றவில்லை. நடிகர் சித்தார்த் இதுவரை போலீஸ் வேடத்தில் நடித்ததில்லை. அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சித்தார்த் உடைய கதாபாத்திரம் கஷ்டமானது .வேறு யாராவது நடித்தால் அதை சிக்கலாக்கி விடுவார்கள். தேர்ந்த ஒரு நடிகரால் மட்டுமே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் அதனால் சித்தார்த் தேர்ந்தெடுத்தோம்.

Conclusion:அடுத்த ப்ரோஜெக்ட் பற்றி?

இப்போதைக்கு ஒன்றும் இல்லை இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் இப்போதைக்கு இதுதான் பணி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.