உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரசைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதற்கிடையில் கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்தார்.
மேலும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் கைதட்டினர். ஒரு சில இடங்களில் மக்கள் ஒன்றுகூடி இதை ஒரு விழா போல கொண்டாடினர். அதுதொடர்பான காணொலிகள் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது.
-
போராட வர சொன்னால் வீட்டில் இருந்துக்கொண்டும், வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியை சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது.☹️ #COVIDIOTS #COVID19outbreak #LockdownNow #SocialDistance #கொரோனா pic.twitter.com/1SHYdfma97
— Rathna kumar (@MrRathna) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">போராட வர சொன்னால் வீட்டில் இருந்துக்கொண்டும், வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியை சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது.☹️ #COVIDIOTS #COVID19outbreak #LockdownNow #SocialDistance #கொரோனா pic.twitter.com/1SHYdfma97
— Rathna kumar (@MrRathna) March 23, 2020போராட வர சொன்னால் வீட்டில் இருந்துக்கொண்டும், வீட்டில் இருக்க சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியை சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது.☹️ #COVIDIOTS #COVID19outbreak #LockdownNow #SocialDistance #கொரோனா pic.twitter.com/1SHYdfma97
— Rathna kumar (@MrRathna) March 23, 2020
இந்நிலையில் இது குறித்து மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ''போராடவரச் சொன்னால் வீட்டில் இருந்துகொண்டும், வீட்டில் இருக்கச் சொன்னால் வீதியில் இறங்கியும் சுத்தத்தால் விரட்ட வேண்டிய கிருமியைச் சத்தத்தால் விரட்ட நினைக்கும் மூடர்கள் சூழ் இந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குருவாய் வந்தாய், நிறைவாய் வாழ்ந்தேன் - டி.பி.கஜேந்திரன்