நடிகரும் இயக்குநருமான ரா. பார்த்திபன் கடந்த ஆண்டு இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று இயக்குநர் பாரதிராஜா புகழ்ந்தார்.
ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்துக்காக பல விருதுகளையும் குவித்தார் ரா. பார்த்திபன்.
இதையடுத்து சமீபத்தில் நவாசுதீனை சந்தித்ததாக ரா. பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அப்பதிவில் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் நவாசுதீன் சித்திக்கை நடிக்கவைப்பதற்காக பேச்சு வார்த்தை நடப்பதாகத் தெரிவித்தார்.
-
Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது.... pic.twitter.com/eK4KVaKJcZ
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது.... pic.twitter.com/eK4KVaKJcZ
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 5, 2020Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது.... pic.twitter.com/eK4KVaKJcZ
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 5, 2020
கடந்த ஆண்டு வெளியான ’பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக தமிழில் அறிமுகமானார் நவாசுதீன் சித்திக். அதைத்தொடர்ந்து தனது சகோதரர் ஷமாஸ் நவாப் சித்திக்கின் இயக்கத்தில் ’போலே சுடியான்’ திரைப்படத்தில் நாவசுதீன் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் நவாசுதீனுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஆகிறார் 'போடா போடி' தயாரிப்பாளர்!