நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘சூரரைப் போற்று’. ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள இத்திரைப்படம் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதையடுத்து நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், சூர்யாவின் 40ஆவது படத்தை இயக்கும் இயக்குநர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார்.
இதுகுறித்து இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இருக்கு ஒரு தரமான சம்பவம்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க குடும்பம் சார்ந்த திரைப்படமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ டிரெய்லர் வெளியானது