நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி நடிப்பில் வரும் 29ஆம் தேதி அடுத்த சாட்டை திரைப்படம் வெளியாகிறது. இந்த கால கல்விமுறை, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவு, சமூகத்தில் உள்ள அவலங்களை சாட்டையடி கொடுத்து ஏற்கனவே 2012ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்ற பெற்ற சாட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப்படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் நாடோடிகள் புரொடக்ஷன் வலையொளியில் 'என் ஆசிரியர்' என்ற தலைப்பில் தனது அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், ஆசியர்களைப்பற்றி நினைவுக்கூர்ந்து பள்ளிக்கால அனுபவங்களை பகிர்ந்த பாண்டிராஜ், தனக்கு தமிழ்ப்பாடம் நடத்திய ஆனந்தி டீச்சர், வகுப்பறை தலைவர் பொறுப்பு, தான் நடித்த பாஞ்சாலி , ராஜாதேசிங்கு நாடகம் உள்ளிட்டவை பற்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஒரு நல்ல ஆசிரியர் ஆயிரம் பாதிரியார்களுக்குச் சமம் என்று கூறியுள்ள அவர், ஆசிரியர் ஆக வேண்டும் என்றுதான் முதலில் எண்ணியதாகவும், பின்னர் காலத்தின் போக்கில் இயக்குநராக தனது பணியை செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.
-
#AduthaSaattai #ENAASIRIYAR
— Pandiraj (@pandiraj_dir) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
மீண்டும் 7வது ,8வது ஞாபகங்களை திரும்பி பார்க வைத்த அண்ணன் சமுத்திரக்கனிக்கு நன்றி 😁🙏
ஆனந்தி டீச்சர் 🙏
School Leader 💪
பாஞ்சாலி ,
ராஜாதேசிங்கு நாடகம் 😍 #Flashback #SchoolLife #memories
Best wishes team 💐👍 https://t.co/uL3F1Lyjnd
">#AduthaSaattai #ENAASIRIYAR
— Pandiraj (@pandiraj_dir) November 27, 2019
மீண்டும் 7வது ,8வது ஞாபகங்களை திரும்பி பார்க வைத்த அண்ணன் சமுத்திரக்கனிக்கு நன்றி 😁🙏
ஆனந்தி டீச்சர் 🙏
School Leader 💪
பாஞ்சாலி ,
ராஜாதேசிங்கு நாடகம் 😍 #Flashback #SchoolLife #memories
Best wishes team 💐👍 https://t.co/uL3F1Lyjnd#AduthaSaattai #ENAASIRIYAR
— Pandiraj (@pandiraj_dir) November 27, 2019
மீண்டும் 7வது ,8வது ஞாபகங்களை திரும்பி பார்க வைத்த அண்ணன் சமுத்திரக்கனிக்கு நன்றி 😁🙏
ஆனந்தி டீச்சர் 🙏
School Leader 💪
பாஞ்சாலி ,
ராஜாதேசிங்கு நாடகம் 😍 #Flashback #SchoolLife #memories
Best wishes team 💐👍 https://t.co/uL3F1Lyjnd
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், 'மீண்டும் 7ஆவது, 8ஆவது பள்ளிக்கால ஞாபகங்களை அடுத்த சாட்டை படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த அண்ணன் சமுத்திரக்கனிக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.