மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சைக்கோ' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்-2' படத்தில் நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் விலகிக்கொண்டார்.
இதையும் படிங்க... விஷால் சொன்ன அந்த வார்த்தை; மிஷ்கினின் கோபம் - துப்பறிவாளன் 2 கை மாறிய காரணம்!
இதையடுத்து, நடிகர் அருண் விஜய்யின் அடுத்தப் படத்தில் மிஷ்கின் இணையவுள்ளதாக அப்டேட்டுகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் அந்தத் திரைப்படம் மிஷ்கின் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான 'அஞ்சாதே' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறப்படுகிறது.
அருண் விஜய்யின் 32ஆவது படமாக இருக்கப்போகும் இந்தத் திரைப்படத்தை அவரின் 31ஆவது படத்தை தயாரிக்கும் 'ஆல் இன் பிக்சர்ஸ் (All In Pictures)' நிறுவனமே தயாரிக்கிறதாம். இந்தத் திரைப்டத்தின் பிற பாத்திரங்களை இயக்குநர் தேர்வு செய்துகொண்டிருப்பதாகவும் விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.