ETV Bharat / sitara

விஷாலின் 'துப்பறிவாளன் 2' படத்திலிருந்து விலகிய மிஷ்கின்? - actor vishal to direct thupparivalan 2

விஷால் நடித்து வந்த 'துப்பறிவாளன் 2' படத்திலிருந்து இயக்குநர் மிஷ்கின் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷாலின் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய மிஷ்கின்?

author img

By

Published : Feb 24, 2020, 9:58 AM IST

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில், 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'துப்பறிவாளன்'. ஆக்ஷ்ன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் லண்டனிலில் நடைபெற்றது. அதில் விஷால், பிரசன்னாவுடன் இணைந்து கவுதமி, ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கிடையில் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் வெற்றி பெற்றதால் அவர் தனது சம்பளத்தை ஏற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் 'துப்பறிவாளன் 2' படத்திலிருந்து மிஷ்கின் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள படத்தின் காட்சிகளை நடிகர் விஷாலே இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து மிஷ்கின், விஷால் மவுனம் காத்துவருவதால் இச்செய்தி உண்மையா? அல்லது வதந்தியா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

இதையும் படிங்க: பாரம் படத்திற்கு போஸ்டர் ஒட்டிய இயக்குநர் மிஷ்கின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.