திரை ஒளியில்'உதிரிப் பூக்கள்' படத்தின்மூலம் ஒழுக்கமுள்ள சினிமாவை தமிழ் மக்களுக்கு கற்பித்தவர் இயக்குநர் மகேந்திரன். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை அவர் காலமானார்.
இவரது மரணம் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஆற்ற முடியாத துன்பத்தை தந்துள்ளது.இவரது இறப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு என்றே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திரை உலகில் இயக்குநர் மகேந்திரனின் நெருங்கிய நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து மகேந்திரன் வீட்டாரிடம் இளையராஜா ஆறுதல் தெரிவித்தார். பாரதிராஜா மகேந்திரனின் பூத உடலை பார்த்து தேம்பித் தேம்பி அழுதார்.
முன்னதாக கவிஞர் வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம், நடிகைகள் சுஹாசினி, ரேவதி உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நடிகர் அஜித், விஜய், தமிழ் சினிமாவின் இயக்குநர், தயாரிப்பாளர் சங்கங்கள் இன்னும் சற்று நேரத்தில் அவரது இல்லத்திற்கு வர இருக்கின்றனர்.