கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் தர்ஷன், லாஸ்லியா நடிக்கும் கூகுள் குட்டப்பன் என்ற படத்தின் பூஜை இன்று (ஜனவரி 28) நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு கே.எஸ்.ரவிக்குமார் பதிலளித்தார். அப்போது ரஜினியை வைத்து மீண்டும் படம் இயக்குவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு சில வாரங்களுக்கு முன் ரஜினி சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். அப்போது ரஜினி 'ராணா' படத்தின் கதையை மீண்டும் சொல்லுமாறு கூறினார்.
இப்படத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். தற்போது அவரது உடல்நிலை முக்கியம். 'ராணா' படம் தொடங்குவது ரஜினி கையில் தான் உள்ளது என்றார்.