நடிகர் துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி, கெளதம் மேனன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெளியான படம் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்". அதுமட்டுமல்லாது இப்படம் துல்கரின் 25ஆவது படமாகும்.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், மவுத் டாக் (Mouth Talk) மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினி ரசிகர் என்பதால், இந்தப் படத்தில் ஒரு சில இடங்களில் அது பிரதிபலித்தது.
இந்தப் படம் வெளியாகி 6 மாதங்கள் கடந்த நிலையில், தற்பொழுது ரஜினிகாந்த் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தைப் பார்த்துவிட்டு, தேசிங் பெரியசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
இந்த உரையாடல் தற்போது லீக்காகி இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது தொடர்பாக தேசிங் பெரியசாமி, தனது ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினியுடனான உரையாடல் லீக்கானதில் சந்தோஷம் இல்லை - இயக்குநர் தேசிங் பெரியசாமி - ரஜினியுடனான தொலைபேசி உரையாடல் லீக்
சென்னை: ரஜினியுடனான தொலைபேசி உரையாடல் லீக்கானது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக இயக்குநர் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார்.