தமிழில் 'மாநாடு', 'டான்', 'பொம்மை' உள்ளிட்டப் பல படங்களில் இயக்குநர் - நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறார். தற்போது இவர் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஓடிடி தளங்களில் வெளியாகும் இணையத் தொடரிலும் கவனம் செலுத்த வருகிறார்.
அந்தவகையில்,கிரைம் திரில்லர் பாணியில், அமேசான் பிரைமில் உருவாகவுள்ள இணையத்தொடரில் எஸ்ஜே சூர்யா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இந்தத் தொடரை இயக்கவுள்ளார்.
இந்த இணையத்தொடரை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிக்கவுள்ளனர். விரைவில் இந்தத் தொடரின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க: சாவடி அடித்து சமாதி கட்டும் டேனியல் பாலாஜி இப்போ 'காட்மேன்'!