தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது, பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் கால்பதித்துள்ளார்.
சமூகவலைதளமான ட்விட்டரில் ஒரு கோடி நபர்கள் பின் தொடரும் முதல் கோலிவுட் நடிகர் எனும் சாதனையை தனுஷ் சமீபத்தில் படைத்தார்.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கால் பதித்து தொடர்ந்து தன் எல்லைகளை விஸ்தரித்து வரும் தனுஷ், ஒரு புறம் கமர்ஷியல் படம், மற்றொரு புறம் கலைத்தன்மை மிக்க கதைக்களங்கள் எனத் தேர்வு செய்து நடித்து வெரைட்டி காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
இன்று (ஜூலை.28) தனுஷ் தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் பலர் சமூகவலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
"தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.@dhanushkraja#HappyBirthdayDhansuh
— Bharathiraja (@offBharathiraja) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/UGh6fhkEzl
">"தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.@dhanushkraja#HappyBirthdayDhansuh
— Bharathiraja (@offBharathiraja) July 28, 2021
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/UGh6fhkEzl"தங்க மகன்" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.@dhanushkraja#HappyBirthdayDhansuh
— Bharathiraja (@offBharathiraja) July 28, 2021
அன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/UGh6fhkEzl
அந்தவகையில் இயக்குநர் பாராதிராஜா தனுஷூக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டரில் வாழ்த்து மடலை பதிவிட்டுள்ளார்.
அதில், "திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுறவி நம் உணர்வோடு, உறவோடு பின்னப்பட்டாதாய் அமைந்து விடும்.
ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குண நலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்துவிடுவதுண்டு.
நிஜ வாழ்க்கையில், எப்படியோ...அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே... அதில் உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் நான் என்கிற அகந்தை அற்ற பணிவு... சிறந்த கலை தொழில் நுட்ப அறிவு இது போதும்டா... இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டு கதவைதட்டும்.
பேரன்புமிக்க 'தங்க மகன்' தனுஷ் இன்றைய நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்" என பாரதிராஜா வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: ’பீஸ்ட் மோடுலேயே இருங்க’ - விஜய்யை வாழ்த்திய தனுஷ்