ETV Bharat / sitara

பாடப்புத்தகத்தில் சிவாஜி; அரசுக்கு பாரதிராஜா நன்றி! - school syllabus

சென்னை: பள்ளி பாடப்புத்தகத்தில் நடிகர் சிவாஜி கணேசனை சேர்த்ததற்கு இயக்குநர் பாரதிராஜா, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

director bharathiraja
author img

By

Published : Jun 6, 2019, 8:09 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசன் ஆற்றிய பங்கு அளப்பரியது. பராசக்தி படத்தில் சக்சஸ் எனும் உரக்கப் பேசிய சிவாஜியின் குரல், இன்று வரையில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கட்டப்பொம்மன், பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்களை, தன்னுடைய மிகச்சிறப்பான நடிப்பின் மூலம் மக்களிடையே எளிதாக கொண்டு சென்றவர். நூறாண்டு தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கு மேலாக தன்னுடைய நடிப்பால் தமிழ் சினிமாவினை கட்டிப் போட்டவர் சிவாஜி.

ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த கணேசன், நடிப்பில் பல சிகரம் தொட்டு சிவாஜி கணேசனாக மாறியவர். தேசிய விருது, செவாலியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். அவரை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வண்ணம், அரசு பள்ளி பாடப்புத்தகத்தில் சிவாஜிகணேசனை சேர்த்து, அவருக்கு தமிழக அரசு கவுரவம் செய்துள்ளது. இதற்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

sivaji
முதல் மரியாதை

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,

உலகின் மாபெரும் கலைஞன்; தெளிவான, உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு; சிறந்த நடிப்புத்திறன் மூலம் 'நடிகர் திலகம்', 'நடிப்புச் சக்கரவர்த்தி' என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்ட செவாலியே சிவாஜி கணேசனைப் பற்றி, மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் கள்ளிக்காடு, தான் சந்தித்த அனுபவங்களைத் தொகுத்து 'சிதம்பர நினைவுகள்' என்ற நூலாக வெளியிட்டார்.

இந்த நூலில் மாமேதை சிவாஜி கணேசனின் நடிப்புத்திறன், கலையுலக அனுபவங்கள், பெற்ற விருதுகள் எனப் பல தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதை, தமிழக அரசு சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு புதிதாக உருவாக்கியுள்ள பாடத் திட்டத்தில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடநூலில் சேர்த்துள்ளது.

bharathiraja
பாரதிராஜா அறிக்கை

சிவாஜி கணேசனுக்குப் புகழ் சேர்க்கும் விதமாகவும், இளம் தலைமுறை மாணவர்கள் அவருடைய கலைத்திறனை அறிந்து கொள்ளும் விதமாகவும் பாடத்திட்டத்தில் சேர்த்துச் சிறப்பித்த தமிழக அரசுக்கு, திரைத்துறையின் மூத்த கலைஞன் என்ற முறையில், கலையுலகம் சார்பாகவும், என் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா, சிவாஜி கணேசன் வைத்து 'முதல் மரியாதை', 'பசும்பொன்' ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

Bharathiraja Thanks Letter to Tamil Nadu Government

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.