ETV Bharat / sitara

திரையரங்குகள் திறக்கும்போது சின்ன படங்களை வெளியிட தைரியம் இருக்கிறதா? - பாரதிராஜா - தயாரிப்பாளர் சிவா

சென்னை: எங்களுடைய திரைப்படத்தைப் பார்ப்பதற்குத்தான் திரையரங்கிற்கு மக்கள் வருகிறார்கள் எங்களுடைய திரைப்படங்கள் இல்லை என்றால் யாரும் திரையரங்கிற்கு வர மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

bharathiraja
bharathiraja
author img

By

Published : Sep 14, 2020, 2:18 PM IST

சென்னை அண்ணா சாலையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்துவைத்த பின் அச்சங்கத்தின் தலைவர் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், "தற்போது படம் எடுக்கக் கூடிய தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் தடையான அல்லது நிறுத்தப்பட்ட திரைப்படங்கள் அனைத்தையும் நடித்து முடித்த பின்னர் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். ஆனால், திரையரங்கு உரிமையாளர்கள் அடாவடித்தனமாகச் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

எங்களுடைய திரைப்படங்களை யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். விருப்பமுள்ளவர்கள் வாங்குவார்கள், இல்லையென்றால் எங்கு விற்க வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்களுடைய திரைப்படத்தைப் பார்ப்பதற்குத்தான் திரையரங்கிற்கு மக்கள் வருகிறார்கள். எங்களுடைய திரைப்படங்கள் இல்லையென்றால் யாரும் திரையரங்கிற்கு வர மாட்டார்கள்.

ஆகவே தயாரிப்பாளர்கள் கோரிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் திரையரங்கிற்கு படங்கள் கொடுக்க மாட்டோம். இனி திரையரங்கு திறக்கும்போது முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் படத்தை தவிர்த்து மற்ற சின்ன படங்களை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தைரியம் இருக்கிறதா? சின்னப்படங்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை" என்றார்.

தயாரிப்பாளர் சிவா
தயாரிப்பாளர் சிவா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சிவா, "பழைய தயாரிப்பாளர் சங்கத்திலும் நாங்கள் உள்ளோம். ஆனால் இந்தச் சங்கத்தில் பதவியில் உள்ளவர்கள் அந்தச் சங்கத் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என முடிவு செய்துள்ளோம். சிறிய படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை. எல்லா படங்களையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: நீட் தற்கொலை; நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு சரமாரி கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.