ETV Bharat / sitara

ருத்ர தாண்டவத்தில் சொல்லியுள்ள விஷயங்களில் நாம் யோசிக்க வேண்டியது என்ன?

மோகன் ஜி இயக்கியுள்ள 'ருத்ர தாண்டவம்' படத்தைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் பாராட்டியுள்ளார்.

bhagyaraj
bhagyaraj
author img

By

Published : Sep 29, 2021, 4:35 PM IST

Updated : Sep 29, 2021, 5:31 PM IST

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், தர்ஷா குப்தா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ருத்ர தாண்டவம்'. இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ் பாராட்டி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, "உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் தரம் உயர வேண்டும் என்பது நமது எல்லோருடைய கனவாக உள்ளது. ஆனால் இதற்கு என்ன தடையாக உள்ளது. சமுதாயத்தில் எப்படி விழிப்புணர்வு வர வேண்டும்.

பாக்யராஜ்

காவல் துறை, சட்டங்கள், நீதித் துறையில் என்னென்ன சீர்திருத்தம் வர வேண்டும் என்பதுதான் 'ருத்ர தாண்டவம்'. இப்படத்தில் சொல்லியுள்ள விஷயங்கள் நாம் யோசிக்க வேண்டியது இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகி எப்படித் தவறான வழிக்குச் செல்கிறார்கள் என்பதே இப்படம்.

நாம் அனைவரும் மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்தனர். ஆனால் இப்படிக் கூறியவர்களை வைத்தே சிலர் அந்தத் தலைவர் எங்கள் சாதி, எங்கள் மதம் எனக் கூறி அரசியல் செய்துவருகின்றனர். இதனை இப்படத்தில் துணிச்சலாகச் சொல்லியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ருத்ர தாண்டவம் அருமை - படக்குழுவைப் பாராட்டிய அண்ணாமலை

Last Updated : Sep 29, 2021, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.