ETV Bharat / sitara

வயது முதிர்ந்த தோற்றத்தில் திலீப் எடுக்கும் புதிய அவதாரம்! - மலையாள ஜனப் பிரிய நாயகன்

மலையாள ஜனப்பிரிய நாயகன் என்ற அந்தஸ்துடன் வலம்வரும் நடிகர் திலீப் நடிக்கும் 'கேஷு ஈ வீடின்டே நாதன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Dileep
Dileep
author img

By

Published : Jan 1, 2020, 12:18 PM IST

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப், எந்த ஒரு காதாபாத்திரத்தையும் ஏற்று நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வல்லமை படைத்தவர்.

தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் மலையாளத் திரையுலகில் தனித்து நிற்கும் திலீப், வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள மை சான்டா திரைப்படம் கேரளாவில் சக்கைபோடுபோட்டுவரும் நிலையில், தற்போது புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக அமைந்துள்ளது.

Dileep
திலீப் எடுத்த அவதாரங்கள்

திலீப் தற்போது அமர் அக்பர் ஆண்டனி, கட்டபனையிலே ஹிரித்திக் ரோஷன் உள்ளிட்ட படங்களை இயக்கிய நதீர்ஷா இயக்கும் 'கேஷு ஈ வீடின்டே நாதன்' திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் திலீப், வயது முதிர்ந்த தோற்றத்தில் வந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கையில் பை, நெற்றியில் சாந்துப் பொட்டு, கண்ணாடி, கீ பேட் மொபைல் உள்ளிட்டவற்றுடன் நடந்து செல்லும் திலீப்பின் இந்தத் தோற்றம் 1980களில் பாடம் எடுத்த கிராமத்து ஆசிரியர் போன்ற காட்சியை கண்முன்னே நிறுத்தியிருக்கிறது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், திலீபுக்கு பாராட்டு குவிந்துவருகிறது.

இதையும் படிங்க...

புலி வேட்டைக்குத் தயாராகிய 'ரேஞ்சர்' சிபிராஜ்

Intro:Body:

Dileep's 'Kesu Ee Veedinte Nadhan' first look to be unveiled on New Year's eve

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.