மன்மதன் படத்தில் சிம்பு தனது மொபைலை கீழே போட்டுவிட்டு ‘தல வாழ்க’ என கோஷமிடுவார். அஜித் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அப்படி செய்ததாக பின்னர் ஒருமுறை கூறினார். அதன்பிறகு பல நடிகர்கள் அஜித் பெயரை தனது படங்களில் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அது அஜித் மீதுள்ள பாசம் என ஒரு தரப்பு சொன்னாலும், இப்படி ஐஸ் வச்சாதான் அஜித் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும்னு பண்றதா ஒரு தரப்பு இத விமர்சிச்சுட்டு இருக்காங்க.
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இதில் ராதிகா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். மே 17ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கான புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள புரோமோ ஒன்றில், சிவகார்த்திகேயன் ராதிகாவை பைக்கில் அமரவைத்து அழைத்து வருகிறார். இந்தக் காட்சியில் ராதிகா ஹெல்மெட் அணிந்திருப்பதை மற்றவர்கள் ஒரு மாதிரி பார்ப்பதாகக் கூறுகிறார். அதற்கு சிவகார்த்திகேயன், நம்ம கரெக்டா இருந்தாலே நம்மல அப்படித்தான் பார்ப்பாங்க, நமக்கு நம்ம தலதான் முக்கியம் என்கிறார்.
இந்தக் காட்சியில் அவர் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை பற்றி கூறியிருக்கலாம். ஆனால் சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயன் அஜித்துக்கு ஐஸ் வைக்கிறார் என கலாய்த்துவருகின்றனர்.