நடிகர் தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜகமே தந்திரம்', ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனது மூன்றாவது இந்தி திரைப்படமான 'அத்ரங்கி ரே' உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதனையடுத்து தனுஷின் 43ஆவது திரைப்படமான #D43 திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தற்காலிகமாக '#D43' என தலைப்பு வைத்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம், இந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் ஷர்ஃபு - சுகாஸ் என்னும் இரண்டு மலையாள எழுத்தாளர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் மலையாளத்தில் வெளியான வைரஸ், வரதன் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளனர். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: ’சுருளி வருகிறான்’: ஜகமே தந்திரம் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!