ETV Bharat / sitara

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் '#D43'! - தி க்ரே மேன்

இயக்குநர் கார்த்திக் நரேன், தனுஷை வைத்து இயக்கும் '#D43' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாவது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

dhanush
dhanush
author img

By

Published : Jun 25, 2021, 5:53 PM IST

தனுஷ் ஹாலிவுட் படமான 'தி க்ரே மேன்' படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து செல்வராகவனின் 'நானே வருவேன்' படத்திற்காக தற்போது தயராகி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேன், தனுஷை வைத்து இயக்கும் '#D43' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பிக்கும் என படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தற்காலிகமாக '#D43' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தாண்டு ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்றது. இதற்கிடையில், கரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து தனுஷும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றார். தற்போது அதன் படப்பிடிப்பு முடிவடைந்தை நிலையில், இந்தியா திரும்பியுள்ளார்.

சிறிது காலம் வீட்டில் ஒய்வெடுக்கும் தனுஷ் அடுத்த மாதம் முதல் 'நானே வருவேன்', '#D43' படங்களில் நடிக்க தயார் எடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கிய தனுஷின் D43!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.