சீனாவிலிருந்து பரவிய கோவிட்-19 இந்தியாவிலும் வேகமாகப் பரவிவருகிறது. இத்தொற்றைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக நாளை மக்கள் சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திரைப்பிரபலங்கள் சிலர் ரசிகர்களுக்கு கோவிட்-19 குறித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் தனுஷ் கரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
#jantacurfew pic.twitter.com/aha5MAtHyF
— Dhanush (@dhanushkraja) March 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#jantacurfew pic.twitter.com/aha5MAtHyF
— Dhanush (@dhanushkraja) March 21, 2020#jantacurfew pic.twitter.com/aha5MAtHyF
— Dhanush (@dhanushkraja) March 21, 2020
அதில், "இந்த கரோனா வைரஸ் நம் அனைவரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு நமக்கு இப்படியொரு சூழல் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். போகட்டும். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நமது கையில் தான் இருக்கிறது.
நமது பிரதமர் கேட்டுக்கொண்ட மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க, நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, நாம் யாரும் வீட்டிலிருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும். அப்படி நாம் இருப்பதால் அரசும், மருத்துவர்களுக்கும் கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருப்போம்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தக ஊழியர்கள் என அனைவரும் அவர்களது உயிரை மட்டும் பணயம் வைத்துப் போராடவில்லை. அவர்கள் குடும்பத்தினர் உயிரையும் பணயம் வைத்துப் போராடி வருகிறார்கள். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது, செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான்.
வீட்டில் இருப்போம், அவ்வளவு தான். கண்டிப்பாக முடிந்த வரை செய்ய வேண்டும். இந்த மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன், மிகவும் அவசியமான விஷயம் என்றால் மட்டுமே வெளியே செல்லவேண்டும். அதுவும் தேவையான முன்னெச்சரிக்கைகளுடன் வெளியே போக வேண்டும்.
சில இளைஞர்கள், கரோனாவால் எங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது என்கிற அஜாக்கிரதையும், கவனக்குறைவும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். தயவுசெய்து அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் கரோனாவைப் பரப்பும் ஒருவராக மாறிவிடுகிறீர்கள்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நீங்கள் ஒரு ஆபத்தாக மாறிவிடுகிறீர்கள். தயவுசெய்து பொறுப்புடன் செயல்பட்டுப் பாதுகாப்பாக இருங்கள். அரசாங்கமும், மருத்துவர்களும் என்னவெல்லாம் பாதுகாப்பு அம்சங்கள் சொல்லியிருக்கிறார்களோ அதைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருப்போம்.
மற்றவர்களையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வோம். நாளை மாலை 5 மணிக்கு நமக்காகப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்காகவும் கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவோம். ஜெய்ஹிந்த்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தனிமைப்படுவோம் நம்மை காக்க.. ஒன்றுபடுவோம் நாட்டை காக்க..! - வைரமுத்து