'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் 40ஆவது படமான இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில், 2020ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம், ஊரடங்கு உத்தரவு காரணமாகத் தள்ளிப்போனது. இந்த நிலையில், இப்படத்திலிருந்து வெளியான 'ரகிட ரகிட', 'புஜ்ஜி' உள்ளிட்ட பாடல்கள் சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
-
#JagameThandhiram Trailer From 𝕁𝕌ℕ𝔼 𝟙 ! 💥#LetsRakita@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @netflixindia @onlynikil pic.twitter.com/OVEnCTl91r
— Y Not Studios (@StudiosYNot) May 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#JagameThandhiram Trailer From 𝕁𝕌ℕ𝔼 𝟙 ! 💥#LetsRakita@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @netflixindia @onlynikil pic.twitter.com/OVEnCTl91r
— Y Not Studios (@StudiosYNot) May 29, 2021#JagameThandhiram Trailer From 𝕁𝕌ℕ𝔼 𝟙 ! 💥#LetsRakita@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @netflixindia @onlynikil pic.twitter.com/OVEnCTl91r
— Y Not Studios (@StudiosYNot) May 29, 2021
இதனையடுத்து, பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இப்படத்தின் டீசரில் மதுரையில் ஹோட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக சுருளி கதாபாத்திரத்தில் வரும் தனுஷ், லோக்கல் டானாக இருந்து இன்டர்நேஷனல் டானாக மாறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது இப்படம் குறித்தான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
கரோனா பரவல் காரணமாக இந்தப் படம் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் ஜூன் 18ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் 'ஜகமே தந்திரம்' பட ட்ரெய்லர் ஜூன் 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.