கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இதில் தனுஷூடன் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தினை YNOT Studios சசிகாந்த் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 22) இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
அதில், மதுரை ஹோட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளியாக வரும் தனுஷ், லோக்கல் டானாக மாறி பின், இண்டர்நேஷனல் டானாக வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது ஓடிடியில் வெளியாகுமா என்று குழப்பம் நீடித்து வந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
#JagameThandhiram teaser!!https://t.co/MXrCYmg3O1
— karthik subbaraj (@karthiksubbaraj) February 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#JagameThandhiram teaser!!https://t.co/MXrCYmg3O1
— karthik subbaraj (@karthiksubbaraj) February 22, 2021#JagameThandhiram teaser!!https://t.co/MXrCYmg3O1
— karthik subbaraj (@karthiksubbaraj) February 22, 2021
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சசிகாந்த் கூறுகையில், "நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்த தளம் தமிழ் கதையினை உலகமெங்கும் எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. இப்படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் அயராத உழைப்பு, படத்தில் கண்டிப்பாக தெரியும், ரசிகர்கள் படம் பார்க்கும் போது, தரப்போகும் உற்சாக குரல்கள் அவர்களின் உழைப்பிற்கு பலனாக இருக்கும். ஒரு தரமான தமிழ் திரைப்படத்தினை உலகளாவிய ரசிகர்களுக்கு அளிப்பதில் YNot Studios பெருமை கொள்கிறது.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” படத்தினை அவர்கள் அனைவரும் கண்டுக் களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.