ETV Bharat / sitara

முன்னறிவிப்பின்றி வெளியான D44 பட அப்டேட்

author img

By

Published : Aug 4, 2021, 12:44 PM IST

நடிகர் தனுஷ் நடிக்கும் D44 படத்தில் இயக்குநர் பாரதிராஜா இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷ்
தனுஷ்

நடிகர் தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர், நான்காவது முறையாக தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார். தற்காலிகமாக D44 என அழைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் D44 படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 6ஆம் தேதிமுதல் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்முறையாக தனுஷ் படத்தில் பாரதிராஜா இணைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மேலும் இதில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், ஹன்சிகா, ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. D44 மட்டுமின்றி இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும், 'மாறன்' படத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்துவருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.