ETV Bharat / sitara

தனுஷின் 'கர்ணன்' படப்பிடிப்பு நிறைவு! - மாரி செல்வராஜ் படங்கள்

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'கர்ணன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

dhanuah
dhanuah
author img

By

Published : Dec 9, 2020, 2:58 PM IST

'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தானு தயாரிக்கிறார்.

தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், நட்டி என்கிற நடராஜன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

திருநெல்வேலியை சுற்றியுள்ள ஊர்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

தற்போது இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், “நன்றி மாரி செல்வராஜ். இதனை எனக்கு அளித்தற்கும், என்றும் முழு ஒத்துழைப்பு அளித்த வி கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி” தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்த சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்த தனுஷ் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.