ETV Bharat / sitara

தேவி குறும்பட டீசர் எப்போது?- அப்டேட் வெளியிட்ட கஜோல் - kajol and sruthi hassan

கஜோல், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள குறும்படத்தின் டீசர் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கஜோல் தெரிவித்துள்ளார்.

Army bதேவி குறும்பட டீசர் எப்போது?- அப்டேட் வெளியிட்ட கஜோல் and
Armதேவி குறும்பட டீசர் எப்போது?- அப்டேட் வெளியிட்ட கஜோல் y band
author img

By

Published : Feb 20, 2020, 10:19 PM IST

கஜோல், ஸ்ருதி ஹாசன், நேகா துபியா, நீனா குல்கர்னி, முக்தா பார்வே, சந்தியா மெத்ரே, ரமா ஜோஷி, ஷிவானி ரகுவன்ஷி, யஷஸ்வினி தயமா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள குறும்படம் 'தேவி'. பெண் இயக்குநர் பிரியங்கா பானர்ஜி எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை ரியான் ஸ்டீபன், நிரஞ்சன் ஐயங்கார் இணைந்து தயாரித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஒன்பது பெண்களின் வாழ்க்கை முறையை எடுத்துரைக்கும் வகையில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வரும் 24ஆம் தேதி (திங்கட்கிழமை) வெளியாகவுள்ளதாக நடிகை கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கான குறும்படம் என்பதால் இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக ஸ்ருதிஹாசன் மற்றும் கஜோல் குறும்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரள முதலமைச்சர் வேடத்தில் மம்மூட்டி- 'ஒன்' பட ட்ரெய்லர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.