தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் மரிய மிக்கேல் என்பவர், தூத்துக்குடி ஜே.எம் 3 நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள 'தர்பார்' படத்தில் சீருடை பணியாளர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாகவும், சீருடையை கொச்சைப்படுத்தும் வகையில் ஹிப்பி தலை, தாடியுடன் வருவதாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
கமிஷனர் பேசும் வசனத்தில், நான் கமிஷனர் அல்ல ரவுடி என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த காவல் துறை, ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. இது வருங்கால இளைய சமுதாயத்துக்கு காவல் துறை மீதுள்ள நல்லெண்ணத்தைக் கெடுக்கும்' எனக் குறிப்பிட்டு 'தர்பார்' படத்தைத் தயாரித்த, இயக்கிய, நடித்த மூவர் மீதும் அவதூறு வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர்கள் ஜெபசிங் செல்வின், கோபி கல்யாணி, மகிபன் மற்றும் தங்க ஸ்ரீஜா ஆஜராகினர்.