ETV Bharat / sitara

'சபாக்' பேக் அப் இன்ஸ்டாகிராமில் அறிவித்த தீபிகா!

தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகிவரும் 'சபாக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதையடுத்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

File pic
author img

By

Published : Jun 5, 2019, 2:50 PM IST

டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வால் என்பவர் காதலிக்க மறுத்த காரணத்துக்காக சில வருடங்களுக்கு முன்பு ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனையடுத்து இவரை போன்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமான பெண்ணாக வலம்வருகிறார் லட்சுமி அகர்வால்.

இவரது இந்தச் செயலை பாராட்டி 2014ஆம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கி கவுரவப்படுத்தினார்.

இந்நிலையில் லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை மையப்படுத்தி 'சபாக்' என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. இதில் லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இப்படத்தை 'ராசி' படத்தின் இயக்குநர் மேக்னா குல்சர் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளாதாக தீபிகா படுகோனே தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்தின் கதாபாத்திரம் என் வாழ்வில் மறக்கமுடியதா ஒன்றும் 2020 ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்றும் அதில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://www.ndtv.com/entertainment/chhapaak-deepika-padukone-wraps-the-most-precious-film-of-her-career-2048143

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.