ETV Bharat / sitara

'சப்பாக்' ட்ரெய்லர் வெளியீடு - தன்னம்பிக்கை இழக்காத ரியல் சிங்கப்பெண்ணாக தீபிகா! - சப்பக் திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு

ஆசிட் வீச்சால் பாதிக்கபட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள 'சப்பாக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

deepika padukone starrer Chhapaak trailer launched

author img

By

Published : Dec 11, 2019, 12:13 PM IST

காதலை ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்காக தனது 15 வயதில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானவர் லட்சுமி அகர்வால். கடந்த 2005இல் நடைபெற்ற இந்தச் சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. ஆசிட் வீச்சால் தனது அழகான முகத்தை இழந்து சிதைந்த முகத்துடன் காணப்பட்ட லட்சுமி அகர்வால் பல இன்னல்களை அனுபவித்தார். ஆனாலும் மனம் தளராத லட்சுமி 'சான்வ் பவுண்டேசன்' என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். இதற்காக லட்சுமி அகர்வால் சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில், 'ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார் லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கியுள்ளார். இப்படத்திற்கு 'சப்பாக்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் லட்சுமி அகர்வாலாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகா படுகோனே தயாரித்துள்ளார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றிருந்த தீபிகா படுகோனின் தோற்றம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான பெண்களின் வாழ்க்கை நிலையை தத்துரூபவமாக அமைத்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

'சப்பாக்' படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. மேலும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தீபிகா படுகோனே உணர்ச்சிவசத்தில் கண்கலங்கினார். அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: குயினுக்கு தயாராகிறதா 2ஆம் பாகம்? - விளக்குகிறார் கௌதம் மேனன்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.