உலக அளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில், 25ஆவது படமாக உருவாகியுள்ள படம் 'நோ டைம் டூ டை'. இதில் டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ஐந்தாவது முறையாக பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் கரோனா அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த ஜேம்ஸ் பாண்ட் ஹீரோ டேனியல் கிரேக் தனது கனவு பாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில் ஒரு பத்திரிகையாளர் சிறு வயதில் இருந்தே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் போன்று ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிப்பீர்கள் என நினைத்ததுண்டா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு டேனியல் கிரேக், கண்டிப்பாக இல்லை. சிறு வயதில் இருந்தே நான் சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்பினேன். ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதாபாத்திரத்தில் நான் என்னைக்குமே நடிக்க விரும்பியது இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால், ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பவில்லை என தெரிவித்தால், தற்போது முரண்பாடாக இருக்கும் எனவும் கூறிஉள்ளார்.
இதையும் படிங்க: ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்ணா?- 'நோ டைம் டூ டை' பட தயாரிப்பாளர் விளக்கம்!