பாதுகாப்பு காரணங்களுக்காக 'நோ டைம் டு டை' படத்தின் படப்பிடிப்பு 'ஆஸ்டன் மார்ட்டின் டிபி 5' காரை ஓட்டுவதற்கு டேனியல் கிரேக் அனுமதிக்கப்படவில்லை.
உலகளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில், புதிய படமாக 'நோ டைம் டு டை' பிரமாண்டமாக தயாராகியுள்ளது. 25ஆவது ஜேம்ஸ் பாண்ட் படமான இதில் டேனியில் கிரேக் பாண்டாக நடித்துள்ளார்.
கேசினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்ரே படங்களுக்கு அடுத்து இவர் நடித்துள்ள கடைசி பாண்ட் படமாக 'நோ டைம் டு டை படம்' அமைந்துள்ளது. இந்தப் படத்தில் ட்ரெய்லர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது படத்தில் நடித்த அனுபவம் குறித்து டேனியில் கிரேக்கும், படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்டண்ட் ஓட்டுநர் ஹிக்கின்ஸ்ஸூம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர் .
டேனியல் கிரேக் கூறுகையில், படப்பிடிப்பின் போது என்னால் ஒரே நேரத்தில் நடிக்கவும் ஜேம்ஸ் பாண்ட்டின் அடையாளமான 'ஆஸ்டன் மார்டின் டிபி 5' காரை ஓட்டவும் முடியவில்லை. காரணம் அது மிகவும் ஆபத்தானது.
ஆனால் நான் அந்த காரை ஓட்டியுள்ளேன். அதிவேக சேசிங் காட்சிகளில் மட்டும் ஹிக்கின்ஸ் காரை ஓட்டியுள்ளார். 'ஆஸ்டன் மார்டின் டிபி 5' காரை மேடெராவில் ஓட்டியது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்து என்றார்.
இவரைத் தொடர்ந்து ஹிக்கின்ஸ் கூறுகையில், இப்படத்தில் வரும் ஆக்ஷ்ன் காட்சிகள் அனைத்தும் டேனியல் கிரேக் உண்மையாகவே செய்தார். முடிந்தவரை இப்படத்தில் நாங்கள் சிஜிஐ பயன்பாட்டை குறைக்க முயற்சி செய்துள்ளோம் என்று நினைக்கிறோம்.
அதுமட்டுமல்லாது இப்படத்தில் நாங்கள் கார் ஓட்டிய சூழல் அனைத்தும் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாக இருந்தது. இதில் காரை ஓட்டுவது அவ்வளவு எளிது அல்ல. டேனியல் கிரேக் காரை ஓட்டுவதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.
மேலும் ஒரு சில காட்சிகளில் அவருக்கு பதிலாக நான் அந்த இடத்தில் இருந்தது ரொம்ப மகிழ்ச்சியை அளித்துள்ளது. டேனியல் கிரேக் அருமையான நடிகர். அவருக்கு பதிலாக நான் காரை ஓட்டுவதற்கு அனுமதித்தற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.
இதையும் வாசிங்க: சீறிப் பாயும் கார்கள்... இத்தாலியில் பாண்ட் நிகழ்த்தும் அதிரடி #NoTimetoDie