தனியார் யூட்யூப் சேனல் நிறுவனத்தினர் கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்துள்ள கண்டிவளி பகுதியில் இன்று காலை முதல் குறும்பட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரோடையை சேதப்படுத்தியும் இந்த குறும்படம் எடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அனுமதியின்றியும் முறையான அனுமதியும் பெறாமல் இந்த படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
படப்பிடிப்பிற்காக அங்கு சில மரங்களையும் படப்பிடிப்பு குழுவினர் வெட்டியுள்ளதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா காரணமாக வெளிநாடுகளில் படப்பிடிப்புகளுக்கு செல்ல முடியாததால் கோவை மாவட்டத்தில் தற்போது அதிகமான அளவில் சினிமா படப்பிடிப்புகளும், குறும்பட படப்பிடிப்புகளும் நடைபெறுகின்றன.
இவர்கள் யாரிடமும் முறையாக அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தவில்லை இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அனுமதியின்றி வனப்பகுதி அருகேயும், நீரோடை பகுதியிலும் படப்பிடிப்பு நடைபெறுவதை தடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.