ETV Bharat / sitara

"தாதா 87" பட நடிகைக்கு தேசிய விருது? படக்குழுவினர் உற்சாகம்! - national award

"தாதா 87'' படத்தில் திருநங்கையாக நடித்த ஸ்ரீபல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாதா 87 பட நடிகை ஸ்ரீபல்லவி
author img

By

Published : Apr 13, 2019, 1:36 PM IST

அறிமுக இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த் ரவி, ஸ்ரீபல்லவி ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் "தாதா 87". வடசென்னையை கதைக்களமாக வைத்து உருவான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இரு வேறு தலைமுறை தம்பதிகளை வைத்து காதல் திருமணம் வெறும் காமத்துடன் முடிவதில்லை என்பதைச் சொல்ல முயன்ற படம். இந்தப் படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக துணிச்சலுடன் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

யாரும் சொல்ல முடியாத கதைக்களத்துடன் திருநங்கைகளை பெண் என்று அழைப்போம் என புரட்சி பேசும் படமாக வந்த "தாதா 87" படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தில் திருநங்கையாக நடித்த ஸ்ரீ பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் "தாதா 87" படக்குழுவிற்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். இதனால் தாதா 87 படக்குழு பயங்கர உற்சாகத்தில் உள்ளனர்.

தேசிய விருது போட்டியில் தாதா 87

தாதா 87 படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர். உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன்,  சரோஜா,  ஜனகராஜ், ஆனந்த பாண்டி,  ஆகியோர் நடிப்பில் கடந்த  மாதம் வெளியான படம்  தாதா 87.

இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

திருநங்கைகளை பெண் என்று அழைப்பபோம் என்ற இயக்குனர்  புரட்சி பேசும் படமாக வெளிவந்த இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது

இந்நிலையில் தற்போது திருநங்கையாக ஸ்ரீ பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து , ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தாதா 87 படக்குழுவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.