அருள்நிதி நடிப்பில், விஜய் கே ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "டி பிளாக்" (D BLOCK). புதுமுகம் அவந்திகா கதாநாயகியாக நடிக்க, ரோன் யோஹன் இசையமைத்துள்ளார். எம்என்எம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இத்திரைப்படத்தினை தயாரித்துள்ளார்.
இதில் உமா ரியாஸ், ‘தலைவாசல்’ விஜய், கரு.பழனியப்பன், லல்லூ, கதிர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை நேற்று முன்தினம் (ஜன.17) இயக்குநர்கள் நெல்சன் திலிப்குமார், லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்நிலையில் "டி - பிளாக்' (D BLOCK) திரைப்படத்தின் ட்ரெய்லரானது யூ - ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு; பணியாளர் செய்த துரோகம்