இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பிக் பாஸ் புகழ் லோஸ்லியா நடித்து வரும் திரைப்படம், 'பிரண்ட்ஷிப்'.
ஜான் பால் ராஜ், சாம் சூர்யா ஆகியோர் இயக்கி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் இன்று (ஜூலை 3) தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்களுக்கு டிரீட் கொடுக்கும் விதத்தில், 'பிரண்ட்ஷிப்' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
'அடிச்சு பறக்கவிடுமா' எனத் தொடங்கும் இப்பாடலைத் தேவா, லோஸ்லியா ஆகியோர் பாடியுள்ளனர். அது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்