கடந்த ஆண்டு கன்னடத் திரையுலகில் இருந்து பிரமாண்டமாக வெளியானது கேஜிஎஃப். இப்படத்தில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.
வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதில் சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் விருது பெற்றது.
தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதற்காக கோலார் தங்க வயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இதனால் அந்த மலைப்பகுதியின் அழகும் தூய்மையும் கெடுவதாக ஸ்ரீனிவாஸ் என்பவர் கோலார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படப்பிடிப்பை தற்காலிமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.